கும்பகோணம் அருகே திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அரசின் திட்டங்கள் முறையாக பொதுமக்களிடம் சேர்வதை கண்காணிக்க வேண்டும். கல்யாண சுந்தரம் எம்.பி.பேச்சு.

திருப்பனந்தாள் அருகே சோழபுரத்தில் திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எம்பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அன்பழகன்.எம்.எல்.ஏ ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சுதாகர், முத்துச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன;-
15 வது கழக பொதுத்தேர்தவில் மீண்டும் கழகத்தலைவராக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்த பொது குழுவிற்கு நன்றி தெரிவிப்பது,
அரசின் திட்டங்கள் முறையாக பொதுமக்களிடம் சேர்வதை கண்காணிக்க வேண்டும்,
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,
இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி, ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும், 17 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்,
மாணவர்கள் அனைவரும் முறையாக கல்வி பயில ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கிய தமிழக முதல்வருக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்து கொள்கிறது.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகர செயலாளர் ஜெப்ரூதீன், பேரூராட்சி தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.