கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 479 வழக்குகள் தீர்வு.

தேசிய சட்டப் பணிகள் ஆனைக் குழு-நியூ டெல்லி, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு-சென்னை வழிகாட்டுதல் மற்றும் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் ஆணைப்படி மற்றும் செயலாளரும் சார்பு நீதிபதியுமான சுதா அறிவுரைகளின் படி கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றங்களில் இந்தியா முழுவதும் ஒரே நாள் ஒரே நேரம் நாடுதழுவிய நேசனல் லோக் அதாலத் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப் பட்டிருந்தது. அதில் முதல் அமர்வில் கூடுதல் மாவட்ட, விரைவு நீதிமன்ற நீதிபதி சண்முகவேல் தலைமையில்,
முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி புவியரசு, வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் செந்தில்குமார் மற்றும் இரண்டாவது அமர்வில் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான சண்முகப்பிரியா தலைமையில், முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடேசப் பெருமாள்,
கூடுதல் மாவட்ட உரிமையியல் ரஞ்சிதா திருவிடைமருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சிவபழனி தலைமையில்,
கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்:1-ன் நீதிபதி பாரதிதாசன், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்.ரகுவீரன் ஆகியோரது பங்கேற்பில் மொத்தம் 809-வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்க பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்பநல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 479-வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது.
அதில் 3-காசோலை மோசடி வழக்கில் மூலம் ரூ. 3,30,000,/-, 48-மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் மூலம் ரூ.1,38,62,233/-, 3- கடன் வசூல் வழக்கின் மூலம் ரூ.2,90,000/- 2-ஜீவனாம்ச வழக்குகள் மூலம் ரூ.2,50,000/-, 415-சிறு குற்ற வழக்குகள் மூலம் ரூ.3,28,700/-
இதர 8-வழக்குகள் மூலம் ரூ.11,66,966/- என 479 வழக்குகள் மூலம் மொத்தம் ரூ.1,62,27,899/- வசூல் ஆகியது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், குணசீலன் மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.