கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பிற்பகல் முதல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் அவ்வப்பொழுது கனமழை பெய்து வருகின்றது.
இதனால் ஏற்படும் திடீர் காற்றாற்று வெள்ளத்தால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில் கடந்த ஞாயிறு அன்று இதேபோன்று மழை பெய்து சுற்றுலா பயணிகள் நீரில் அடித்துச் செல்லும் சூழல் உருவானது.
இந்நிலையில் அருவியல் நீர் வரத்து குறைந்து கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதித்த நிலையில் மீண்டும் அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்கானல் வெள்ளகெவி உள்ளிட்ட இடங்களில் பிற்பகல் முதல் மழை பெய்ய துவங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் அருவியல் குறித்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் வெளியேற்றி பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர்.
செய்தியாளர் தேனி-சதிஸன்.