BREAKING NEWS

குறவர் பழங்குடி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடர் அலுவலகத்தில் அடுப்பு பாத்திரங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

குறவர் பழங்குடி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடர் அலுவலகத்தில் அடுப்பு பாத்திரங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி நகர் பகுதியில் 500 க்கு மேற்பட்ட குறவர் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். தூய்மை பணியாளராகவும் கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு நிரந்தர இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு குறவர் பழங்குடி குடும்பங்களுக்கு என பெரியகுளம் வடவீரநாயக்கன்பட்டியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் குடிசை மாற்று வாரியம் சார்பாக 85 பயணாளிகளுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள குறவர் பழங்குடி மக்களுக்கு வடவீரநாயக்கன்பட்டி பகுயிலே தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்கப்பட்ட 110 கான்கிரீட் வீடுகள் வழங்க வேண்டும் என வனவேங்கைகள் கட்சி சார்பாக கோரிக்கை விடுத்த நிலையில், நரிக்குறவர் சமுதாய மக்களும் அதே குடியிருப்புகள் வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் காரணமாக இரு சமுதாய மக்களும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தி 55 வீடுகள் குறவர் பழங்குடி சமுதாய மக்களுக்கும் 55 வீடுகள் நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு என முடுவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை வழங்கக் கோரி வனவேங்கைகள் கட்சி சார்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து அடுப்பு பாத்திரங்களுடன் போராட்டம் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போது காவல்துறையினர் தடுத்தனர் இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Share this…

CATEGORIES
TAGS