குறிச்சி ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு.

திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் கணேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நேற்று தமிழகத்தின் உள்ளாட்சிகள் தினமான கொண்டாட அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி, சொத்து வரி செலுத்துதல் உள்பட கிராம சபா கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
குறிச்சி ஊராட்சியை அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்ட பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராம சபை கூட்டத்தில் உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர் கண்ணகி, ஊராட்சி செயலர் பூமிநாதன், கால்நடை உதவி மருத்துவர், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.