குறு வட்ட அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற அரசு பள்ளி.

பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
திருநெல்வேலி நகர்ப்புற அளவிலான குறுவட்ட போட்டியில் ஏறக்குறைய 32 பள்ளிகள் கலந்து கொண்டது.
இதில் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த அளவில் அதிக அளவிலான பரிசுகளை வென்று சாம்பியனாக இந்த திருநெல்வேலி நகர்புற குறுவட்டளவில் முதலிடம் பெற்றனர்.
முதலிடம் பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்த வெற்றிக்காகபாடுபட்ட உடற்கல்வி இயக்குனர் திரு சாம்நியூட்டன் உடற்கல்வி ஆசிரியர் திரு முத்துக்குமார் ஆகியோர்களையும் வெகுவாக பாராட்டினர்.
CATEGORIES திருநெல்வேலி
