குற்றாலத்தில் நிரந்தர மருத்துவர் இல்லாமல் அவல நிலையில் உள்ள அரசு மருத்துவமனை

தமிழகத்திலே நகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் ஒரு மருத்துவமனை தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இயங்கி வருகிறது கடந்த சில வருடங்களாக இந்த மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர்கள் இல்லாமல் அவல நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறது ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மருத்துவர்களும் வருகிறார்.
இந்த நேரம் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது என வாரத்தில் மூன்று நாட்கள் மருத்துவர் வருகிறார்கள் சில நாட்கள் மருத்துவர்கள் வருவதும் கிடையாது குற்றாலம் என்பது சுற்றுலா தளம் என்பது அனைவருக்கும் தெரிவிக்கவும் இங்கு 24 மணி நேரம் மருத்துவமனை செயல்பட வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருக்கும் தமிழக அரசிடம் இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் கோரிக்கை மனு அனுப்பிய போது குற்றாலம் அருகில் மேலகரத்தில் ஒரு PHC இருக்கிறது குற்றாலத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இலஞ்சிஒரு PHC இருக்கிறது…
குற்றாலத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை இருக்கிறது.
8 கிலோமீட்டர் தொலைவில் செங்கோட்டையில் மருத்துவமனையில் இருக்கிறது ஆகவே குற்றாலத்தில் 24 மணி நேரம் மருத்துவமனை என்பது கேள்விக்குறியாகி உள்ளது தயவு செய்து மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் அவர்கள் குற்றாலம் என்பது இயற்கை இன்ப சுற்றுலா தளம் குற்றாலத்தில் ஐந்து அருவிகளில் உள்ளடக்கிய பகுதி ஜூன் ஜூலை ஆகஸ்ட்.. கார்த்திகை மார்கழி தை இந்த ஆறு மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற இடம்.. இதுபோக மாதம் சபரிமலை ஐயப்பன் நடை திறக்கும் போதெல்லாம் சுற்றுலா பகுதி வருகிறார்.
ஆகவே குற்றாலத்தில் அரசு சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் படுக்கை வசதி உள்ள மருத்துவமனை அமையப் பெற்றால் சிறப்பாக இருக்கும் இதை விரைவாக செய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் கனிவான பார்வைக்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தர வேண்டும் என இப்பகுதி குற்றாலம் வர்த்தக சங்கம் விடுதி உரிமையாளர்கள் நல அமைப்பு சமூக ஆர்வலர்கள் ஆகியோர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இது இருந்து வருகிறது
