BREAKING NEWS

குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள்..

குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள்..

தென்காசி மாவட்ட செய்தியாளர் – கிருஷ்ணகுமார் ஒளிப்பதிவாளர் கணேஷ்குமார்.

 

தை அம்மாவாசையை முன்னிட்டு குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள் – புரோகிதர்கள் வேத மந்திரங்களை முழங்க எள் தண்ணீர் இறைத்து தர்ப்பணம் செய்தனர்.

 

 

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அம்மாவாசை, புரட்டாசி மகாளய அம்மாவாசை, தை அம்மாவாசை நாட்களில் மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ஆறு, கடல், அருவி உள்ளிட்ட நீர் நிலைகளில் புனித நீராடி எள் தண்ணீர் இறைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதே போன்று இன்று தை அம்மாவாசை தினத்தில் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது குடும்பத்திற்கு நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.

 

 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவி கரையில் இன்று அதிகாலை முதலிலேயே பல ஆயிரம் மக்கள் அருவியில் புனித நீராடி அங்கு இருந்த புரோகிதர்களிடம் தர்ப்பை புல் அணிந்து எள் தண்ணீர் இறைத்து தர்ப்பணம் செய்து தங்களது முன்னோர்களை வழிபட்டனர்.

 

 

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து இருந்த நிலையிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது இருப்பினும் பல மணி நேரம் காத்திருந்து தர்ப்பணம் செய்து விட்டு அருவியில் புதை நீராடிய பின்னர் அருவிக்கரையில் உள்ள திருக்குற்றாலநாதர் சிவாலயத்தில் சிறப்பு வழிபாடுகளையும் நடத்தினர்.

 

CATEGORIES
TAGS