BREAKING NEWS

குளத்தில் இருந்து தனிநபர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்க தடை: கிராம மக்கள் கோரிக்கை.

குளத்தில் இருந்து தனிநபர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்க தடை: கிராம மக்கள் கோரிக்கை.

தூத்துக்குடி,

சிவஞானபுரம் “மருதாணி குட்டம்” குளத்தில் இருந்து தனி நபர் பயன்பாட்டிற்காக குழாய் அமைக்கும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இது தொடர்பாக சேர்வைக்காரன்மடம் ஊர் தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு : தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேர்வைக்காரன்மடம் கிராம ஊராட்சியில் சிவஞானபுரம் கிராமம் அமைந்துள்ளது.

 

விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ள எங்கள் கிராமப் பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையிலும் நிலத்தடி நீரை பாதுகாத்திடவும் எதுவாக “மருதாணி குட்டம்” என்ற பாசனக்குளம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

 

 

மருதாணி குட்டம் குளத்திற்கு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் வடகால் பாசன வாய்க்கால் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த குளத்தை சுற்றி ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது. இந்த விவசாய நிலங்களில், வாழை, மஞ்சள், நெல், தென்னை போன்றவை சாகுபடி செய்யப்பட்டும் வருகிறது.

 

பொதுவாக மருதாணி குட்டம் குளத்தின் தண்ணீரானது இந்த குளத்தை சுற்றியுள்ள விவசாயிகளின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குளத்தை சுற்றி போர்வெல்கள், கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்தால் கூட அதனை இந்த குளத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

 

முக்கியமாக “மருதாணி குட்டம் குளத்தில் இருந்து எக்காரணம் கொண்டும் தண்ணீரை வேறு எந்த பகுதிக்கும் யாரும் எந்த விதத்திலும் எடுத்துச்செல்லக் கூடாது” என்று ஏற்கனவே எங்களது கிராம ஊராட்சியில் தீர்மானிக்கப்பட்டு அது நடைமுறையில் இருந்து வருகிறது.

 

இந்நிலையில் “மருதாணி குட்டம்” குளத்தில் இருந்து அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தனிநபர் தனது சொந்த பயன்பாட்டிற்காக 3கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் அமைத்து தண்ணீர் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் கிராம மக்களை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே கிராம மக்களின் வாழ்வாதாரத்தை காத்திட தனிநபர் பைப் அமைக்கும் திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )