குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்:
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (48) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தம்மன்னன் மகன் மாரிச்சாமி (எ) ராஜி (44) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 23.03.2023 அன்று மேற்படி முருகன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மாரிச்சாமி (எ) ராஜி அவரிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முருகன் நேற்று (24.03.2023) அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வீரபாண்டியன் வழக்குபதிவு செய்து எதிரி மாரிச்சாமி (எ) ராஜியை கைது செய்தார்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி மாரிச்சாமி (எ) ராஜி மீது ஏற்கனவே மாசார்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், குளத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.