BREAKING NEWS

குழந்தைகள் தின விழாவான இன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளை பூங்கொத்து, சாக்லேட், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கல்வி சுற்றுலா அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்.

குழந்தைகள் தின விழாவான இன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளை பூங்கொத்து,  சாக்லேட், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கல்வி சுற்றுலா அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்.

தூத்துக்குடி மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து,

 

மாற்றுத்திறன் உடைய இளம் சிறார்களுக்கான கல்வி சுற்றுலா இன்று சிறுவர்கள் தின விழாவை முன்னிட்டு கல்வி சுற்றுலாவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து புறப்பட்டு சென்றனர்.

 

 

 இவர்கள் தூத்துக்குடி துறைமுக தகவல் மையம், தூத்துக்குடி புதிய துறைமுகம், தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை, ரோச் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாவாக சென்று அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு வருவார்கள் என தெரிவித்தனர்.

 

இந்த சுற்றுலாவில் 42 மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாய் பேச முடியாத இளம் சிறார்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் என மொத்தம் 72 பேர் இந்த கல்விச் சுற்றுலாவில் புறப்பட்டு சென்றனர்.

 

 

 

 இவர்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியை சேர்த்து அனுப்பி வைத்தார் முன்னதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்த இளம் சிறார்கள் அவருக்கு நேருவின் பிடித்த பூவான ரோஸ் பூவை மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்து வரவேற்றனர்.

 

மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் கொடுத்த அன்பு பரிசான பூவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சாக்லேட் மற்றும் இனிப்புகளை வழங்கி சந்தோஷப்படுத்தினார்.

 

வந்திருந்த அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களையும் ஒவ்வொருவராக தனித்தனியாக மாணவர்களையும் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இருந்து பூக்களைப் பெற்றுக் கொண்டு சாக்லேட்டுகளை வழங்கினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )