குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்” விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி சமூக பணித்துறையும், கோட்டார் மறைமாவட்ட ஆற்றுப்படுத்துதல் பணியும் இணைந்து “மன அழுத்த மேலாண்மை, குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்” என்ற தலைப்புகளில் மூன்று பிரிவுகளாகப் விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தின் தியான மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் முதல் பிரிவை திருச்சிலுவை கல்லூரி நாகர்கோவில் சமூக பணித்துறை மாணவி டிஸ்னி, இரண்டாம் பிரிவை ஆஷிகா மற்றும் மூன்றாம் பிரிவை பிரியங்கா ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கி அதில் மன அழுத்தம், குழந்தை வளர்ப்பு மற்றும் அடிமை தனத்தின் வகைகள் பற்றி சிறப்பு பங்கு தந்தை மேக்சன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தந்தை சதன்ஸ்டார் (ஆலோசனை அமைச்சகத்தின் இயக்குனர்) கலந்து கொண்டு மன அழுத்த மேலாண்மை, குழந்தை வளர்ப்பு மற்றும் அடிமை தனத்தின் வகைகள் பற்றி விழிப்புணர்வு வழங்கினார்.
இறுதியில் சமூக பணித்துறை மாணவி நன்றியுரை வழங்கினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும், இக்கால சூழலுக்கு இவைகள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை என்றும், அதை எங்களுக்கு வழங்கியதற்கும் நன்றி தெரிவித்தனர்.