கூடன்குளம் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த சிறுவர் உள்பட 8 பேர் கைது.
திருநெல்வேலி மாவட்டம்
கூடன்குளத்தை சேர்ந்த ஜெபின் என்பவர், ராதாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் 10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
அதில் 4 ஆயிரத்தை ஜெபின் கொடுத்துவிட்டார். இகூடன்குளம் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த சிறுவர் உள்பட 8 பேர் கைது.
இந்நிலையில் மணிகண்டன் மீதி பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததால் ஜெபின் அவரது பைக் மற்றும் RC Bookயை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜெபின் 09.11.2022 அன்று கூடங்குளம் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்த போது கூடங்குளத்தை சேர்ந்த லிங்கம் என்பவர் ஜெயினை ஏமாற்றி அழைத்து சென்று மணிகண்டன் மற்றும் சிலர் அழைத்து சென்று ஜெயினின் மனைவிக்கு போன் பேசி மிரட்டி Gpay மூலம் பணத்தை அனுப்ப சொல்லி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஜெபினின் மனைவி ஐஸ்வர்யா(25), கூடங்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ,
மற்றும் உதவி ஆய்வாளர் வினுகுமார் விசாரணை மேற்கொண்டு மேற்படி ஜெயினை ஏமாற்றி அழைத்து சென்று மிரட்டல் விடுத்த லிங்கசாமி(19), ராதாபுரத்தை சேர்ந்த சுடலையாண்டி(19) வடக்கன்குளத்தை சேர்ந்த முத்து(21), தெற்கு பெருங்குடியை சேர்ந்த சுபிலேஷ்வரன்(21) மற்றும் சுரேந்தர்(20) ஆகியோரை கைது செய்தும் மேலும் மூன்று இளஞ்சிறார்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.