BREAKING NEWS

கூட்டணி ஆட்சி – அமித் ஷா மீண்டும் திட்டவட்டம்

கூட்டணி ஆட்சி – அமித் ஷா மீண்டும் திட்டவட்டம்

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமித்ஷா கூறியதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘கூட்டணி ஆட்சி’ என அமித் ஷா கூறவில்லை என்று மழுப்பலாக பதில் அளித்தார்.

இந்நிலையில், செய்தி தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமித் ஷா, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கேற்குமா? என்ற கேள்விக்கு, ‘ஆம்’ என பதில் அளித்தார்.

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

Share this…

CATEGORIES
TAGS