கூட்டுப் பண்ணை முறையில் தமிழக விவசாயிகள் சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி தகவல்.
தஞ்சாவூரில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் நிறுவனத்தில் (NIFTEM-T),வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி ஆணையம் மற்றும் பொன்னி அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் டெல்டா விவசாயிகளின் சங்கமம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
NIFTEM இயக்குனர் (பொ) லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (கோவை) துணைவேந்தர்
கீதாலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், மேலும் agricultural and processed food products export development authority தலைவர் டாக்டர் அங்கமுத்து காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேசும்போது, இந்த கடந்த 2021-22 ஆண்டை விட இந்த வருடம் 25 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது, இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 142 கோடியாக உள்ளது வரும் 2033 ஆண்டுகளில் 358 கோடி கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது, மக்கள் தொகையில் சீனாவை முந்தி இந்தியா முதலிடத்தில் வகிக்கும், தற்போது நமது உணவு தானிய உற்பத்தி 340 மில்லியன் டன் அதிலிருந்து 355 மில்லியன் டன் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நம்முடைய விளை பொருட்கள் 15 முதல் 30 சதவீதம் வரை வீணாகின்றன,விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கோ 57 என்ற மேம்படுத்தப்பட்ட கருப்பு கவுனி அரிசி விதைநெல் வெளியிடப்பட்டுள்ளது.
இதை வருடம் முழுவதும் இந்த நெல் ரகங்களை பயிரிடலாம், இந்த புதிய ரக கருப்பு கவுனி நெல் ரகத்தால் விளைச்சல் ஹெக்டேருக்கு 4.5 டன் வரை விளைச்சல் தரும் என்றும் இதில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது, ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாக உள்ளது.
கண்பார்வை தொடர்பான சத்தும் அதில் உள்ளது என்றும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக விதை நெல்லும் தயாராக வைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார் மேலும் வறட்சி, அதிக வெப்பம், வெள்ளம், ஆகியவைகளை தாங்கி வளரக்கூடிய ஜீன் கண்டுபிடித்து உயர்ரக விளைச்சல் நெல் ரகங்களில் செலுத்தி ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
என்றும் தண்ணீர் வராத காலங்களில் குறுவை சாகுபடியில் மாற்றுப் பயிராக மக்காச்சோளம், எண்ணெய் , பயிர் வகை பயிர்களை சாகுபடி செய்யலாம்,அதில் அதிக லாபமும் பெறலாம், மேலை நாடுகளில் உள்ளது போல் கூட்டுப் பண்ணை முறையில் விவசாயிகள் ஈடுபட்டு ஒரே மாதிரியான பயிர்கள் சாகுபடி செய்து விலை நிர்ணயம் அவர்களே செய்து லாபம் அதிகம் பெற்று இடுபொருள் செலவை குறைக்கலாம் என்று தெரிவித்தார் இக்கருத்தரங்கில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.