கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி- முந்தல் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.
கேரள மாநிலத்தில் மீண்டும் பறவை காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது.
இதனால் சில நாட்களாக ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகளை கேரளாவில் கொன்று புதைத்து வருகின்றனர்.
இதனால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் பறவை காய்ச்சல் பரவி விடாமல் தடுப்பு நடவடிக்கையை தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையினர் மேற்க்கொண்டுள்ளனர்.
மேலும் கோழிகள், கோழி முட்டை, கோழி குஞ்சுகளை கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமழிக-கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டம் போடி முந்தல் சோதனைச் சாவடியில் கால்நடை மருத்துவர், சுகாதார பணியாளர்கள் என சுமார் 4க்கும் மேற்பட்டோர் கேரளாவில் இருந்து போடி மெட்டு வழியாக..,
தமிழகத்திற்குள் வரும் சரக்கு வாகனங்கள், லாரிகள், காய்கறி வாகனங்கள், உள்ளிட்டவைகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வாகனங்களின் சக்கரங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளித்த பின்னரே தேனி மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
மேலும் கேரளாவிலிருந்து கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட பறவைகளுடன் தமிழகத்திற்க்குள் வரும் வண்டிகளை கேரளாவிற்க்கு திருப்பி அனுப்பி வைத்து வருவதாகவும் தெரிவித்தனர்.