BREAKING NEWS

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; புளியரை சோதனை சாவடியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம்!

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; புளியரை சோதனை சாவடியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம்!

தென்காசி மாவட்டம்.

கேரளாவில் பரவி வரும், பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக, தமிழக-கேரள எல்லைப்பகுதியான தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

 

அங்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின்பேரில், நெல்லை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பொன்வேல் தலைமையில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.

 

 

முகாமில் புளியரை கால்நடை டாக்டர் ஜெயபால்ராஜா மற்றும் கால்நடை ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர், கிருமிநாசினி தெளிப்பாளர்கள் 2 பேர் ஆகியோர் பணியில் இருக்கிறார்கள். அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி செய்து வருகிறார்கள்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )