கே.வி.குப்பம் சந்தையில் 9000 ஆயிரம் முதல் 10,000 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை வியாபாரிகள் தகவல்

கே.வி.குப்பம் சந்தையில் 9000 ஆயிரம் முதல் 10,000 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை.
வேலூர் மாவட்டம் கே.வி குப்பத்தில் திங்கள்கிழமை தோறும் பிரபலமான ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம் இதில் வேலூர்,காட்பாடி, குடியாத்தம், பரதராமி, ஆந்திர மாநிலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும்…
கே.வி.குப்பம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கருப்பாடு, வெள்ளாடு, செம்மறியாடு, என 200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வரும் அதன்படி இன்று காலை வழக்கம்போல் ஆட்டு சந்தை கூடியது இதில் வழக்கம் போல் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.
இதில் கடந்த வாரம் நடைபெற்ற சந்தையை விட இன்று காலை நடைபெற்ற சந்தையில் ஆடுகள் வரத்து சற்று கூடுதலாக இருந்தது இதில் சுமார் ரூபாய் 9,000 முதல் 10,000 வரை ஆடுகள் விற்பனையானது.
மேலும் இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில் எதிர்பார்த்த அளவிற்கு ஆடுகள் விற்பனை இல்லை மேலும் விலை படியாத ஆடுகள் மீண்டும் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன ஆனால் பெரும்பாலான ஆடுகள் கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வாங்கிச் சென்றதால் வந்த விலைக்கு விற்று விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.