கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் கும்பாபிஷே நடத்துவதற்காக ஏழு கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது கட்டிட வேலைகள் எதுவுமே நடைபெறவில்லை என பொதுமக்கள் குமுறல்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்ம தேச கிராமத்தில் அருள்மிகு கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் உள்ளது இக்கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 18 ஆண்டுகள் முடிந்து உள்ளது கோவிலில் கும்பாபிஷே நடத்துவதற்காக ஏழு கோடி ரூபாய் அரசிடம் இருந்து ஒதுக்கப்பட்டது.
ஆனால் இதுவரை ஆகியும் கும்பாபிஷேத்துக்கான கோவில் உள்ள விமானங்கள் கட்டிட வேலைகள் எதுவுமே நடைபெறவில்லை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக விமானங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு உள்ளது தமிழக அரசிடமிருந்து பணம் ஒதுக்கப்பட்டது.
என்று செய்தித்தாள்களில் செய்திகள் வந்தது ஆனால் இதுவரைக்கும் இந்த கோவிலுக்கு எந்த பணிகள் நடப்பதற்கு பணம் எதுவும் வரவில்லை ஆதலால் பிரம்மதேசம் கிராம மக்கள் அம்பாசமுத்திரம் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆறு மணி அளவில் கைலாசநாதர் கோவிலுக்கு வந்து கும்பாபிஷேக வேலை சம்பந்தமாக கோவிலை பார்வையிட்டார் கோவில் அர்ச்சகர் ராஜ்குமார் மற்றும் கோவில் அலுவலக கணக்காளர் சுகன்யா கோவில் சம்பந்தமாக விவரங்களை கேட்டறிந்தார்.
வெகு விரைவில் கும்பாபிஷேக நடைபெற அரசிட முயற்சி செய்து கோவிலுக்கு பணிகள் செய்வதற்கு பணத்தை வாங்கி தருகிறேன் என்று மக்களிடம் உறுதி அளித்துள்ளார் பின்னர் அகில பாரத சேவா சங்கம் தலைவர் நாராயண ஆசிரியர் செயலர் சண்முகம் சட்டமன்ற உறுப்பினர் சேர்க்கை அவர்களிடம் ஹரிஹரா சாஸ்தா கோவில் சம்பந்தமாக கோவில் கட்டுவதற்கு கிருஷ்ணன்கோவில் வகையறா அறநிலையத்துறை அலுவலகத்தில் அனுமதி வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார்.
இந்நிகழ்வில் பிரம்மதேச கிராம மக்கள் ஆகிய அதிமுக பொறுப்பாளர்கள் அம்பை ஒன்றிய செயலாளர் துரை அம்பை கே எஸ் ஆர் மாரிமுத்து மன்னார் கோவில் சண்முகவேல் மற்றும் கட்சி பிரமுகர்கள் சட்டமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் மகாலிங்கம் மற்றும் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்