கொத்தாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்பகனூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றியது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தாம்பாடி ஊராட்சியில், கல்பகனூர் செல்லும் சாலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
என்று ஊராட்சி மன்ற தலைவரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர் இதனால் ஊராட்சி நிர்வாகம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் ஆகற்றினர்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆத்தூர் ஒன்றிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டார் உடன் இருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.
CATEGORIES சேலம்
TAGS ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்கொத்தாம்பாடி ஊராட்சியில்சாலை ஆக்கிரமிப்பு ஆகற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்