கொலை, கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுப்பட்டுவந்த இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு.
செய்தியாளர் செங்கைஷங்கர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் ஆணையரகத் திற்குட்பட்ட மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிங்கபெருமாள் கோவிலை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன்களான காளிதாஸ் (எ) டில்லிபாபு(36) மணிகண்டன் (எ) சுள்ளான் மணி(33) உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தல், பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகர சட்டம் மற்றும ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சிபி சக்கரவர்த்தி கூடுவாஞ்சேரி சரக உதவி ஆணையாளர் ஜெயராஜ் மற்றும்.,..
மறைமலைநகர் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் ஆகியோர் பரிந்துரையின் பேரில், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின்படி காளிதாஸ், மணிகண்டன் ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.