கொள்ளையர்களின் கூடாரமாகும் அறநிலையத்துறை

தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில்
கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமுறைகள் பாடுவதற்கு ஓதுவாமூர்த்திகள் இல்லாத நிலையில், தன்னார்வத்தோடு திருவாசகம் படிக்க வருகிற அடியார்களை வற்புறுத்தி வசூல் கொள்ளை நடத்தியுள்ளதுஅறநிலையத்துறை .
சிவனடியார்களை வற்புறுத்தி 200 ரூபாய்க்கு ரசீது செலுத்தினால் மட்டுமே திருவாசகம் முற்றோதுதல் படிக்க வேண்டும் என்கிற அவல நிலையை உருவாக்கியுள்ளது.
இதுதான் திராவிட மாடல் தமிழை வளர்க்கும் லட்சணம். என அப்பகுதி பொதுமக்கள் குமுறுகின்றனர்
கோயிலுக்கு வரவேண்டிய கடை வாடகை வருமானங்கள் பல லட்சக்கணக்கில் வசூல் செய்ய வக்கத்து நிற்கும் அறநிலையத்துறை நிர்வாகம், திருவாசகம் படித்து தமிழ் வளர்க்கும் சிவனடியார்களிடம் வசூல் வேட்டை நடத்துகிறது என்று தென்காசி மாவட்ட ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
TAGS அரசியல்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலதென்காசி மாவட்டம்முக்கிய செய்திகள்ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்
