கோடை காலம் தொடங்கியுள்ளதால் ராணிப்பேட்டையில் திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் திமுக சார்பாக அனைத்து இடங்களிலும் திமுக தொண்டர்கள் மூலமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் தண்ணீர், பந்தலை மாநில சுற்றுச்சூழல் அணியின் துணைச்செயலாளர் வினோத் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கொண்டு திறந்து வைத்து பொதுமக்கள் தாக்கத்தை போக்கும் விதமாக நீர்மோர், மற்றும் குளிர்பானங்கள் பழச்சாறு, உள்ளிட்டவைகள் வழங்கினார்.
இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் திமுக இளைஞரணி, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் பிற அணி மாவட்ட நிர்வாகிகள், சுற்றுச்சூழல் அணியின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.