BREAKING NEWS

கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்.

கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்.

 

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் தொடர்ந்து ஒரு மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

 

மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இதமான கால சூழ்நிலை மற்றும் பல் போர்த்திய மலைகளை உரசி செல்லும் மேகங்கள் எங்கு பார்த்தாலும் பசுமை புல்வெளிகள் நுழைவாயிலில் வெள்ளி நீர் வீழ்ச்சி நகரின் மையப்பகுதியில் நட்சத்திர வடிவிலான ஏரி தற்போது நகராட்சியால் அழகாக உருவாக்கப்பட்ட நீரூற்று மேலும் தோட்டக்கலை, துறையால் பிரையன், பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, என அழைத்து உருவாக்களிலும் தற்போது லட்சக்கணக்கான மலர்கள் நடவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளை கவர் வகையில் பூத்துக் குலுங்கி வருகின்றனர் அதேபோல் வனத்துறைக்கு சொந்தமான குணா குகை .தூண்பாறை.பசுமை பள்ளத்தாக்கு.

 

தற்கொலை பாறை, அமைதி பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், நல்லவனூர் ஏரி, என அனைத்து பகுதிகளிலும் தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.

 

மேலும் இன்று தமிழக மட்டுமல்லாமல் கேரளா கர்நாடகா பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை அதிக அளவில் சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கு வந்ததால் கொடைக்கானல் நகர் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்

CATEGORIES
TAGS