கோரந்தாங்கல் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி வெகு நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் தற்பொழுது கோடை காலம் துவங்கி 100 டிகிரி வரை நாள்தோறும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கின்றது மேலும் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சி அந்தந்த கட்சிகளின் சார்பில் நடைபெற்று வருகின்றது.
இதனையடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காட்பாடி கோரந்தாங்கல் பேருந்து நிலையத்தில் பிரம்மபுரம் ஆறாவது வார்டு கவுன்சிலர் ரஞ்சித் குமார் தலைமையில் பிரம்மாண்டமான நீர் மோர் பந்தல் சிறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் SRK அப்ப கலந்து கொண்டு நீர் போர் பந்தலினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், வெள்ளரி, தர்பூசணி, மோர், குளிர்பான வகைகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் K.S.சுபாஷ்,
விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆர்.சுந்தர்ராஜ், பகுதிச் செயலாளர்கள் ஜனார்த்தனன், நாராயணன், பேரவை ரவி, எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி மாவட்ட செயலாளர் S.P.ராகேஷ் ஒன்றிய செயலாளர் எம்.ஏழுமலை, அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.