BREAKING NEWS

கோவில்பட்டியில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவமனையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவில்பட்டியில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவமனையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி கோவில்பட்டியில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவமனையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

 

 

 

பின்னர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், உள்ள திட்டங்குளம் தீப்பெட்டி தொழிற்சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்து தொழிற்சாலை ஊழியர்களுடன் குறைகளை கேட்டறிந்தார்.

 

 

 

பின்னர், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், புதியதாக கட்டப்பட்டுள்ள 10.50 கோடி மதிப்பில் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

 

 

 

இதில், நவீன வசதிகளுடன் மருத்துவர் அறை, பதிவறை, அவசர சிகிச்சை, நோயாளிகள் காத்திருக்கும் அறை, மருந்தகம், முதல் தளத்தில், 44 படுகைக்களுடன் ஒரு அறுவை சிகிச்சை அறை, இரண்டாம் தளத்தில், 44 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவுடன் 2 அறுவை சிகிச்சை அறை அமைந்துள்ளது.

 

 

 

இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்,

 

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்,

 

 

கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட குழு துணை தலைவர் மகாலட்சுமி சந்திரன், நகர செயலாளர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )