கோவில்பட்டியை அருகே பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய கூறிய பள்ளி தலைமை ஆசிரியர்- வகுப்புகளை பள்ளி மாணவ மாணவிகள் புறகணித்து தர்ணா போராட்டம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிழவிபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 30 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அங்கு பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் லீலா ஜெயலட்சுமி தினந்தோறும் பள்ளி வளாகத்தையும் கழிவறையையும் தினந்தோறும் சுத்தம் செய்ய கூறுவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து பள்ளி வகுப்பறை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் அறிந்து வந்த ((தொடக்க கல்வி)) மாவட்ட அலுவலர் சின்னராசு காவல்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வருகை புரிந்து கிராம மக்கள் ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகிழவிபட்டி கிராமம்குற்றம்கோவில்பட்டிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூத்துக்குடி மாவட்டம்பள்ளி வளாகத்தையும் கழிவறையையும் சுத்தம் செய்ய கூறிய தலைமை ஆசிரியர் லீலாமுக்கிய செய்திகள்