கோவில்பட்டி அருகேயுள்ள சாயமலையில் அமைந்துள்ள மென்மேனி சாஸ்தா அய்யனார் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை உள்ள சாயமலையில் மென்மேனி சாஸ்தா அய்யனார் கோவில் கொடை விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.
இக்கோயில் கொடை விழா கடந்த 18 ம் தேதி தொடங்கி. விழா நாட்களில் தினமும் காலை மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. நேற்று (24ம் தேதி) நள்ளிரவு 12 மணியளவில் சாமக்கொடை பூஜை மற்றும் நையாண்டி மேளம் வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10மணியளவில் கோவில் முன்பு நேர்த்திகடனுக்காக ஏராளமான கிடாக்களை (ஆடு) மற்றும் சேவல்களை வெட்டி நேர்த்தி கடன் செலுத்தினர் தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபாடும் நடத்தினர்.
தொடர்ந்து விநாயகர், பேச்சி பெருமாச்சி, இருளப்பன், சங்கிலிபூதத்தார், கருப்பசாமி, முத்து வீரன் உள்ளிட்ட பரிவார7 தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடத்தினர். பின்னர் 12 மணியளவில் உச்சி கால பூஜை நடைபெற்றது.
விழாவிற்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.