கோவில்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம்

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி பகுதியை சேர்ந்த சஞ்சய் என்ற மாணவர் அப்பகுதியில் உள்ள உயர் நிலை பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார்.
கட்ந்த மாதம் 14 ம் தேதி அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு தரப்பு மாணவி மீது தெரியாமல் விழுந்த சஞ்சய் மீது மாணவியின் பெற்றோர் மாரியம்மாள்,லட்சுமி இருவரும் சம்பத்ன்று பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவரை தாக்கி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் வகுப்பு செல்லாமல் பள்ளியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர் மேலும் ஐந்திணை மக்கள் கட்சி கிராம ஊர் மக்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு.
சம்பவம் அறிந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் பேச்சு வார்த்தைகள் உடன்பாடு எட்டப்பட்டது. போராட்டக்காரர்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தை போராட்டத்தை கைவிட்டனர்.