கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பகநகர் பகுதியில் சாலை, வருகால் தெரு விளக்கு உள்ளிட்ட வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பக நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு காரணமாக அப்பகுதியில் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதியில் சாலை, வருகால், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத பஞ்சாயத்து நிர்வாகம் உள்ளதாகவும்,

மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து தலைவரிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை பலமுறை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை எனவும் இது தொடர்பாக எத்தனையோ போராட்டங்கள் நடத்தி உள்ளனர்.



எனவே உடனடியாக பஞ்சாயத்து நிர்வாகம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும், உடனே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
CATEGORIES தூத்துக்குடி
