கோவில்பட்டி அருகே கடம்பூர் வழியாக சேர்மா தேவி, கீழபாப்பாக்குடிக்கு ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 71,850 பறிமுதல் .
கோவில்பட்டி அருகே கடம்பூர் வழியாக சேர்மா தேவி, கீழபாப்பாக்குடிக்கு ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 71,850 பறிமுதல் .
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் ஜங்ஷனில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தலட்சுமி தலைமையில்,
சிறப்பு உதவி ஆய்வாளர் பிச்சை, தலைமை காவலர் ராஜாராம், பெண் காவலர் சமுத்திரக்கனி, ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மாருதி சுசுக்கி எக்கோ ஸ்டார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் ஆவணம் இன்றி ரூபாய் 71 ஆயிரத்து 850 இருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் சேர்மா தேவி, கீழ பாப்பாக்குடியைச் சேர்ந்த பெருமாள் சேட் மகன் ஜெகதீசன் மற்றும் ஓட்டுனரான முத்துச்சாமி மகன் அருள்ராஜ் என்பதும் இவர்கள் பீடி பண்டல்களை கமுதியில் கொடுத்து விட்டு அதற்கான பணத்தை வசூல் செய்து விட்டு கடம்பூரில் வசூலுக்காக வந்ததும் தெரிய வந்தது தொடர்ந்து விசாரணையில் அவர்களிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கான ஆவனம் மட்டுமே இருப்பது தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணத்தினை கோவில்பட்டி தாசில்தார் சரவணப்பெருமாள் மற்றும் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெள்ளத்துரை ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.