BREAKING NEWS

கோவில்பட்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 2பேர் உயிரிழந்தனர்

கோவில்பட்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 2பேர் உயிரிழந்தனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நக்கல முத்தன்பட்டியில் காரும் லாரியும் நேருக்கு நேர் கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இவ்விபத்தில் காரை ஓட்டிவந்த குலசேகரப்பேரி ஒத்தக்கடை தங்கப்பாண்டி மகன் முகேஷ் (25), மற்றும் காரில் வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் முத்து மகள் பேச்சியம்மாள் (17) ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

 

விபத்தில் இறந்த பேச்சியம்மாள் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இருவரும் காரில் கோவில்பட்டி இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்றபோது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இறந்த இருவரின் உடல்களும் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

 

இவ்விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டிவந்த தென்காசி மாவட்டம் கீழ கரிசல்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்த செண்பகராஜ் மகன் முனீஸ்வரன் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

CATEGORIES
TAGS