கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி மாலதி (47) ஆஞ்சநேயர் என்பவரது மனைவி ஈஸ்வரி (40) பொன்மாரியப்பன் என்பவரது மனைவி தங்க மாரியம்மாள்,
பாலகுருசாமி என்பவரது மனைவி முருகலட்சுமி (35) துரைப்பாண்டியன் என்பவரது மகன் மகாலிங்கம்(27) ஆகியோர் இன்று மாலை வழக்கம் போல் விவசாய பணியை முடித்துவிட்டு எம்.வெங்கடேஷ்வரபுரம் -மார்த்தாண்டம் பட்டி கிராமத்திற்கு இடையே பாலத்தின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் ஈஸ்வரி, தங்க மாரியம்மாள், முருகலட்சுமி, மகாலிங்கம் ஆகியோர்களுக்கு பற்கள் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார், தாசில்தார் சசிகுமார், மார்த்தாண்டம் பட்டி வி.ஏ.ஓ செல்வக்குமார் ஆகியோர் உயிரிழந்த மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மாலதிக்கு தங்கப் பிரகாஷ் (24) என்ற மகனும் தங்கமாரி (22), கன்னிகா (18) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
