கோவில்பட்டி அருகே வறுகால் மற்றும் சிமெண்ட் சாலை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி; கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள 14 ஆவது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான புதிதாக வறுகால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி உள்பட்ட சத்திரப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.20 லட்சம் மதிப்பிலான புதிதாக பேவர் பிளாக் சாலையை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கயத்தார் நகரச் செயலாளர் கப்பல் ராமசாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி,மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன்,14 ஆவது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் தங்க பாண்டியன்,14 ஆவது வார்டு செயலாளர் மாரிமுத்து,
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளி பாண்டியன்,மாணவரணி ஒன்றிய இணைச் செயலாளர் கண்ணன், இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, சத்திரப்பட்டி கிளைச் செயலாளர் ஞானச்சாமி, அகிலாண்டபுரம் கிளை செயலாளர் லெனின், மற்றும் அதிமுக நிர்வாகிகள் சசிகுமார், கடம்பூர் மாயா துரை, கடம்பூர் விஜி, கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.