கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா..!
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பங்கேற்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தினை தமிழக முதல்வர் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாவட்ட ஆட்சியர் தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் அலுவலகத்தை பார்வையிட்டனர்.