கோவில்பட்டி – கடம்பூர் வரையிலான 21 கிலோமீட்டர் ரயில்வே வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை ட்ராலி வண்டியில் சென்று இறுதி கட்ட ஆய்வு மேற்கொண்டார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
கோவில்பட்டி – கடம்பூர் வரையிலான 21 கிலோமீட்டர் ரயில்வே வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ரயில் இயக்குதல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ட்ராலி வண்டியில் சென்று இறுதி கட்ட ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடம்பூர் இடையிலான 25 கிலோ மீட்டர் ரயில்வே பாதையில் 11 கிலோமீட்டர் தொலைவிற்கு ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு ரயில்களை வேகமாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த ஓராண்டு காலமாக கோவில்பட்டி – கடம்பூர் இடையேயான ரயில்வே வழித்தடத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று இறுதி கட்ட ஆய்வு பணி நடைபெற்றது.
தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் தலைமையில், துணை பாதுகாப்பு ஆணையர் நிதிஷ்குமார் ரஞ்சன், தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி குப்தா, மதுரை மண்டல மேலாளர் பத்மநாதன் ஆனந்த், மதுரை கோட்ட ரயில்வே முதன்மை பொறியாளர்கள் மஸ்தான்ராவ்,
முதன்மை கட்டுமான பொறியாளர் இளம்பூரணன், முதன்மை தொலை தொடர்பு பொறியாளர் பாஸ்கர்ராவ், முதன்மை மின் பொறியாளர் பாலாஜி, துணை முதன்மை பொறியாளர் சூரியமூர்த்தி, செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்ட குழு அதிகாரிகள் கோவில்பட்டியிலிருந்து கடம்பூர் வரை உள்ள 5 பெரிய பாலங்கள்,14 சிறிய பாலங்கள் குறித்தும் டிராலியில் சென்று ஆய்வு செய்தனர்.
இளையரசனேந்தல், லட்சுமி மில்ஸ், நாலாட்டின்புதூர், குமராபுரம் – பாறைபட்டி, கடம்பூர் ரயில்வே கேட் பகுதிகளை பார்வையிட்டனர். இருப்புப் பாதை ஸ்டேஷன், சிக்னல்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.