கோவில்பட்டி கோட்டாட்சியர் உத்தரவை மீறி விளையாட்டு போட்டிக்கு அனுமதி பொங்கல் பண்டிகையன்று கிராம மக்கள் உண்ணாவிரதம் கோவில்பட்டி அருகே பரபரப்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடாரம் வட்டம் அக்காநாயக்கன்பட்டியில் சுமார் 650 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள், அங்குள்ள கோயிலை நிர்வகிப்பதில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பான விசாரணை கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது கோயில் தொடர்பாக யாரும் விழாக்குழு நிகழ்ச்சிகளோ நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பிரிவினர் தமிழர் திருநாளன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அக்காநாயக்கன்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விழா 15, 16-ம் தேதிகளில் நடத்த வேண்டும் என அனுமதி கோரியிருந்தனர். இதற்கு 15ஆம் தேதி மட்டும் விழா நடத்திக் கொள்ள வட்டாட்சியர் அனுமதி அளித்திருந்தார்.
இதையடுத்து அனுமதி பெற்ற பிரிவினர் நேற்று விளையாட்டுப் போட்டிகளை நடத்த தயாராகினர். இது என்ன அறிந்த மற்றொரு பிரிவினர் கோட்டாட்சியரின் உத்தரவை மீறி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து மணியாச்சி உட்கோட்ட காவல்காரர் டிஎஸ்பி லோகேஸ்வரன் மற்றும் போலீசார் அக்கா நாயக்கம்பட்டிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அதிகாரி தரப்பில் கேட்டபோது, கோவில் விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தவே கோட்டாட்சியர் அனுமதி மறுத்துள்ளார். இது பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். அவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
அதுவும் பள்ளி மாணவ மாணவிகளை மட்டும் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனை மீறி சிலர் இளைஞர்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகளில் நடத்த முற்பட்டனர். அது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. இதில் கோட்டாட்சியரின் உத்தரவு எங்கும் மீறப்படவில்லை என்றனர்.