கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பல்வேறு திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊராட்சி ஒன்றியம்
மந்தித்தோப்பு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான புதிதாக சமுதாயம் நலக்கூடம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து
பாண்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ் எஸ் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் மற்றும் பாண்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழத்தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் மற்றும் இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தங்கப்பன் நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.