கோவில்பட்டி நகராட்சி பகுதியில் சாலை பணிகளை சீரமைக்க கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்து நிலையில்- அரசியல் கால் புணர்ச்சியோடு ரத்து செய்த விடியோ தி மு க அரசை கண்டித்து அதிமுக நகர கழகம் சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில் சாலை பணிகளை சீரமைக்க மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில் 275 சாலைகளை சீரமைக்க மூன்றாவது கட்டமாக ரூபாய் 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 137 சாலை பணிகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ரத்து செய்த விடியா திமுக அரசை கண்டித்தும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்,
உடனடியாக சாலை பணிகளை தொடங்கிட முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அறிவித்தலின் பேரில் கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் கோவில்பட்டியில் உள்ள கடலூர் ரோடு பங்களா தெரு வள்ளுவர் நகர் பகுதியில் கடை மற்றும் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து விடியா திமுக அரசின் அவலத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக இந்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
இதில் முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், கிளைச் செயலாளர்கள் 22 வது வார்டு ரவிச்சந்திரன், 23 வது வார்டு துரைப்பாண்டி, 24வதுவார்டு நகர மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கிருபாகரன், மாரியப்பன், துரைசிங்கம், பழனி குமார்,உடன் இருந்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.