BREAKING NEWS

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம் – பல்வேறு சங்கங்கள் ஆதரவு நகர் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம் – பல்வேறு சங்கங்கள் ஆதரவு நகர் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை 6.87 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

 

 

இந்நிலையில் அங்கு செயல்பட்டு வரும் தினசரி சந்தைதை இடமாற்றம் செய்வது தொடர்பாகவும் கூடுதல் பேருந்து நிலையத்தில் தற்காலிக கடைகள் அமைக்க குலுக்கல் முறையில் கடைகள் தேர்வு செய்யபடுவது தொடர்பாகவும் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

 

இடமாற்றம் மற்றும் புதிய கட்டுமானம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விரிவடைந்த நகராட்சி கூடுதல் தினசரி சந்தை உருவாக்கிட வேண்டும்.. தற்போது வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள கடைகள் புதிய கட்டுமானத்திற்கு பிறகும் அக்கடைகளை அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி..

 

 

தங்கள் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் இக்கூட்டத்தை பெரும்பாலான வியாபாரி சங்கங்கள் புறக்கணித்த நிலையில் இடமாற்றம் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தற்போது கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது தினசரி சந்தையில் 398 கடைகள் செயல்பட்டு வருகின்றன..

 

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் மார்க்கெட் நுழைவாயில் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கம் தொழில் வர்த்தக சங்கம் நகை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட இருவருக்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நகர் பகுதி முழுவதும் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

 

CATEGORIES
TAGS