கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய எல்லையை மாற்றிய மைக்கக்கோரி. அரசு அலுவக வளாகத்தில் பொங்கல் வைத்து போராட்டம்.
கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய எல்லையை மாற்றிய மைக்கக்கோரி த.மா.கா போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையம் நிலையத்திற்கு உட்பட்ட கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி போதும் பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப்பட்டி, வரதம்பட்டி, இந்தப் பகுதிகள் அனைத்தும் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளன.
இந்த கிராமப்புற பகுதிகளில் ஒரு பிரச்சனை என்றால் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் இருந்துதான் போலீசார் செல்ல வேண்டும். இதற்கு சுமார் 40 நிமிடங்கள் ஆகிவிடுகிறது. அதேபோல் புகார் அளிக்க அங்குள்ள மக்கள் கோவில்பட்டியை கடந்து தான் நாலாட்டின்புதூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயண நேரம், பண விரயம் ஏற்பட்டு வருகிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப காவல்துறையில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் காவல்நிலைய எல்லை மட்டும் ஆங்கிலேயர்கள் காலம் தொட்டு அப்படியே உள்ளது. அதனால் நாலாட்டின்பதூர் காவல் நிலைய எல்லையை மாற்றியமைக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுமார் 30 கிராம மக்கள் பயன்பெறும் விதமாக கடலையூரை தலைமையிடமாகக் கொண்டு காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்து கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் வைத்து பானைகளில் பொங்கல் வைத்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் பேரணியாக சென்ற த.மா.காவினரை போலிஸ்சார் தடுத்து நிறுத்தினார்.. மேலும் டி.எஸ்.பி அலுவலக வாயில் முன்பு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.