BREAKING NEWS

கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள்.

கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு;  கடையில் கருப்பு கொடி கட்டியும் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் 350 க்கும் மேற்பட்ட கடைகள செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கட்டிடங்கள் பழுது அடைந்ததன் காரணமாக கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6.81 கோடி மதிப்பீட்டில் அங்குள்ள கடைகளை எடுத்துவிட்டு புதிய மார்க்கெட் அமைப்பதற்கு,

 

 

நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் கடை அமைப்பதற்கு புதிய இடத்தை தேர்வு செய்து அங்கு கடைகள் அமைப்பதற்கு வழிவகை செய்த பின்னர் மார்க்கெட்டை இடிக்க வேண்டும்.

 

 

இல்லையென்றால் தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் தினசரி சந்தைகள் இயங்கி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஊழியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடை வாயில் கருப்பு கொடிக்கட்டியும் வாயில் கருப்பு துணி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

CATEGORIES
TAGS