BREAKING NEWS

கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காத மோடி அரசை கண்டித்து – காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி எஸ்.டி பிரிவு தலைவர் கண்ணாயிரம் சார்பில் மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் நடைபெறும் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்தவர் என்ற ஒற்றைக் காரணத்திற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வை அழைக்காத பாசிச பாஜகவை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி எஸ்.டி பிரிவு தலைவர் கண்ணாயிரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசையும் மோடியையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், bsnl துரை ராஜ், காளிதாஸ் ஆகியோர் முன்னிலையில் sc/st பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து அவர்கள் கண்டன உரையாற்றினார்.

மேலும் pcc உறுப்பினர் திருப்பதி ராஜா, intuc ராஜா சேகரன், ஜோஷ்வா, sc/st பிரிவு நகர தலைவர் நேதாஜி காளிதாஸ், மகிலா காங்கிரஸ் மாநில செயலாளர் மரியவினோல, பழனிசாமி, முருகன், மகேந்திரன்,வேலசாமி, சண்முகவேல், கோபால், பிச்சைக்கனி,பாலமுருகன், சக்தி கிரண் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

CATEGORIES
TAGS