கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக நான்காவது ஆண்டு விழா

பொது மக்களுக்கு சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக நான்காவது ஆண்டு விழா, பொது மக்களுக்கு சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா,
மற்றும் உதிரம் கொடுத்து உயிரைக் காத்த குருதி கொடையாளர்களுக்கு கௌரவப்படுத்தும் விழா என முப்பெரும் விழாவாக கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி, பொருளாளர் கார்த்திகேயன், நிர்வாக குழு உறுப்பினர்கள் நடராஜன் பாலமுருகன் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜோதி காமாட்சி வரவேற்புரை வழங்கினார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் ஆனந்தவல்லி, சங்கரேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, தாயப்பா, ஆகியோர் குத்து விளக்கை ஏற்றி வைத்தனர். பஜ்ரங் நர்த்தனாலயா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து.
இதோ எந்தன் தெய்வம் என்ற தலைப்பில் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி )பாஸ்கரன் அவர்கள் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களை கௌரவித்ததை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், குருதிக் கொடையாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு, மாதம் தோறும் அன்னதானம் வழங்கியவர்கள் ஆகியோர்களை சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் மஞ்சள் துணிப்பைகளை உபயோகிப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.. இவ்விழாவிற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளும், மஞ்சள் துணி பைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக காவல்துறை கண்காணிப்பாளர் ஜகநாதன், தனி வட்டாட்சியர் சரவணபெருமாள், அரசு தலைமை மருத்துவமனை முதுநிலை குடிமை மருத்துவர் வெங்கடேஷ், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன், விஏஓ மந்திர சூடாமணி, கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத் தலைவர் சங்கர் கணேஷ், பொருளாளர் ரேவதி, எவரெஸ்ட் பள்ளிகளின் தலைவர் தொழிலதிபர் அய்யனார், பராசக்தி மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் கிருஷ்ணமூர்த்தி , கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்தீஸ்வரன், அருண் பேக்கரி மாடசாமி, மிலிட்டரி சந்திரசேகர், லட்சுமி டெக்கரேஷன் சண்முகவேல், வேலவன் கன்சல்டன்சி பழனி மாரியப்பன், லட்சுமி நாட்டு மருந்து கடை பெரியசாமி, தொழிலதிபர்கள் தினேஷ் பாலாஜி, அசோக், தனபால், கொல்லம் சேகர், ராஜசேகரன், பஜ்ரங் நர்த்தனாலயா கணபதி, சங்கரநாராயணன் மலரகம் செல்வம், ஆக்ரா காளிராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணிமாவட்ட செயலாளர் ஜீவானந்தம், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கயத்தாறு கணேசன், ஆசிரியர்கள் அன்பு, பாண்டியன்,சாரதி மெடிக்கல் சந்தரக்கண்ணன், அரசு ஒப்பந்தக்காரர்கள் மயில் கர்ணன், காளிதாஸ், செல்வ விநாயகா ஸ்டோர் மகேந்திரன், சசிகுமார், சரத் மணி, 7000 பண்ணை பாண்டி, செயற்குழு உறுப்பினர்கள் கணபதி ஜுவல்லர்ஸ் கதிரேசன் தங்கராஜ், எஸ் பி பாண்டியன், முத்து மாரியப்பன், மாரிமுத்து, சமூக ஆர்வலர்கள் ஜீவா அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், ஸ்ரீமதி ராதா ராணி கிருஷ்ணா பக்தி இயக்கம் நிறுவனர் ரமேஷ் பசுமை இயக்கம் செந்தில்குமார், நல்ல விதை அறக்கட்டளை ரூபராஜ், மற்றும் அறக்கட்டளை வழக்கறிஞர்கள் முனீஸ்வரன், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் லவராஜா நன்றி உரை நிகழ்த்தினார்..