கோவில் கட்டப்பட்ட இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி கோவிலை அகற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் கொடுத்த நோட்டீசை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவாங்கர் முன்னேற்ற அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் வள்ளிபுரம் ஊராட்சியில் ஜிஎன் பசுமை கார்டன் என்ற பகுதியில் உள்ள ரிசர்வ் சைட் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் அமைத்துள்ளனர் மேலும் அதே இடத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டி ஒன்றும் கட்டப்பட்டுள்ளது இந்நிலையில் தண்ணீர் குழாய் செல்லும் பகுதியில் ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளதாக வள்ளிபுரம் ஊராட்சி நிர்வாகம் கோவிலை ஏழு நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என நோட்டீஸ் வழங்கி உள்ளது. நீர் வழிப் பாதைக்கு தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தவறான நீர்வழிப் பாதை அமைத்து கோவில் வழியாக கொண்டு செல்வது தவறான நடவடிக்கை எனவும். பொதுமக்கள் இணைந்து கட்டிய கோவிலை அகற்ற வேண்டும் என வழங்கப்பட்ட நோட்டீஸ் இருக்கு தடை விதித்தும் தங்கள் தரப்பினரை விசாரித்து முறையான நீர்வழிப் பாதையில் குழாய்கள் அமைக்க வேண்டும் எனக் கூறி தேவாங்கர் முன்னேற்ற அமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
