சங்கரன்கோவிலில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் நீர் நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக மரம் நடுதல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு அறக்கட்டளை தலைவர் கதிர்வேல் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொருளாளர் திவ்யா எம். ரெங்கன், செயற்குழு உறுப்பினர் உறுப்பினர் கண்ணன், இணை ஒருங்கிணைப்பாளர் வள்ளி ராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
துணைச் செயலாளர் பழனிச்செல்வம் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் மாரியப்பன் தொகுப்புரை வழங்கினார். பேரணி சங்கரன் கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்பு துவங்கியது.
பேரணியை சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன் துவக்கி வைத்து கோமதி அம்பாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பேரணியை முடித்து வைத்து பேருரை ஆற்றினார்.
மாணவர்கள் மரம் நடுதல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கினார்கள்.
பேரணியில் நகர வர்த்தக சங்கத் தலைவர் முத்தையா, சங்க நிர்வாகிகள் சுப்பையா ரமேஷ், ஆறுமுகம், சுந்தர், இலியாஸ், ஷாஜகான், திருப்பதி, ஸ்ரீதர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மாரிராஜ் நன்றி கூறினார்.
