BREAKING NEWS

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் பட்டுப்புடவை நிர்வாகம் சார்பில் ஏலம்.

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் பட்டுப்புடவை  நிர்வாகம் சார்பில் ஏலம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும்.

 

இக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீகோமதி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக பட்டுப்புடவை வழங்குவது வழக்கம் அப்பட்டு புடைவைகளை ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி அன்று திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ஏலத்தில் விடப்படுகிறது அச்சேலைகளை பெண் பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் ஏலத்தில் எடுத்துச் செல்கின்றனர்.

 

 

இச்சேலைகளை எடுத்துச் செல்லும் பெண் பக்த்தர்கள் கோமதி அம்மன் தங்களது இல்லத்தில் இருப்பதாககூறுகின்றனர். மேலும் இன்று 127 சேலைகள் ரூபாய் 66.620 க்கு ஏலம் மூலம் விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )