சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள்கள். வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம்.
இத்திருவிழா நாளை (25.04.23) காலை கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது இதனையொட்டி சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூரில் கோமதி யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
முன்னதாக திருக்கோவிலில் இருந்து கோமதி யானை முன் செல்ல சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளினர்.அங்கிருந்து 6 கி.மீ.தொலைவில் உள்ள பெருங்கோட்டூருக்கு சென்றனர். அப்போது பக்தர்கள் வழிநெடுக நின்று தேங்காய்பழம் உடைத்து பக்தியுடன் சுவாமி அம்பாளை வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து கோமதி யானை மதியம் சரியாக 1.05 மணிக்கு பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பிறகு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது.இதனைக் காண சங்கரன்கோவிலைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.