BREAKING NEWS

சங்கரன்கோவில் நகராட்சி திமுக தலைவர் பதவி பறிப்பு!

சங்கரன்கோவில் நகராட்சி திமுக தலைவர் பதவி பறிப்பு!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் இருக்கின்றன. இதில் அதிமுக அதிகபட்சமாக 12 இடங்களிலும், திமுக 9 இடங்களிலும் வென்று இருந்தது. கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தி.மு.க.வைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் தலைவியாக இருந்தார்.

இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவியை உமா மகேஸ்வரி இழந்துள்ளார். சொந்த கட்சியினரான திமுகவினரே அவரை கவிழ்த்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பஞ்சாயத்து என்பது பல மாதங்களாக நீடித்து வருகிறது. அடிக்கடி சண்டைகள், சச்சரவுகள், வாக்குவாதங்களை பார்த்திருப்பீர்கள். அங்கு என்ன பிரச்சனை என்ன நடந்தது என்பதை பார்ப்போம். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி என்பது நடுத்தரமான நகராட்சியாகும். இங்கு மொத்தம் 30 வார்டுகள் இருக்கின்றன.

கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்றது. ஆனால் மெஜாரிட்டி பெறவில்லை.. 12 வார்டுகளில் அ.தி.மு.க. வென்றது. ஆனால் திமுக 9 வார்டுகளில் தான் வென்றது.எனினும் கூட்டணி கட்சியான மதிமுக 2 வார்டுகளிலும், காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. தலா 1 வார்டுகளிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தி.மு.க.வைச் சேர்ந்த உமா மகேஸ்வரி தலைவியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதேநேரம் துணை தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த கண்ணன் தேர்வானார்.

இந்தநிலையில், சங்கரன்கோவில் நகராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை நகராட்சி தலைவி உமா மகேஸ்வரிக்கு எதிராக தி.மு.க.வினரே கூறிவந்தனர்.

கோவையில் எப்படி திமுகவினரே முன்பு இருந்த மேயர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்களோ, அதுபோலவே தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலும் அடிக்கடி நடந்தது. இந்த பிரச்சனைகள் காரணமாக நகராட்சி கூட்டங்களில் கடும் வாக்குவாதம் நடந்தது. மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக தீர்மானங்கள் கூட சரிவர நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த 2023-ம் ஆண்டு தி.மு.க. கவுன்சிலர்கள், அ.தி.மு.க. கவுன்சிலர்களுடன் இணைந்து உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்கள். அப்போது இந்த பிரச்சினையில் தி.மு.க. தலைமை நேரடியாக தலையிட்டு, சமரசப்படுத்தியது. இதன் காரணமாக உமா மகேஸ்வரி பதவி தப்பியது. ஆனால் எல்லாம் கொஞ்ச நாள் தான் நன்றாக சென்றது.

சில மாதங்களுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. அதாவது, உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி கடந்த மாதம் 2-ந்தேதி தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 24 பேர் கையெழுத்திட்டு நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஜூலை மாதம் 2-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

CATEGORIES
TAGS