BREAKING NEWS

சங்கரன்கோவில் வன சரகர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில்;.

சங்கரன்கோவில் வன சரகர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில்;.

தென்காசி செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வனச்சரக வனப்பணியாளர்களின் ரோந்து பணியின்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்யானை, தலையனை அருகே, வாசுதேவநல்லூர் பீட்டில் நோய்வாய்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

 

அதனை மாவட்ட வன அலுவலர், திருநெல்வேலி தகவல் தெரிவிக்கப்பட்ட மாவட்ட வன அலுவலர் அவர்களின் அறிவுரையின்படி,

 

 

இன்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வன கால்நடை உதவி மருத்துவர் மனோகரன் அவர்களது குழு, திருநெல்வேலி கால்நடை மருத்துவகல்லூரி துறை தலைவர் மருத்துவர் முத்துகிருஷ்னன், வாசுதேவநல்லூர் கால்நடை உதவி மருத்துவர் அருண்குமார்,

 

 

சிந்தாமணி கால்நடை உதவி மருத்துவர் கருப்பையா ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் இன்று 20/11/22 காலை காயம் பட்ட பெண் யானைக்கு முதல் கட்ட மருத்துவ சிகிச்சையை மாவட்ட வன அலுவலர் அவர்கள் முன்னிலையில் மேற்கொண்டனர்.

 

 

நோய்வாய்பட்டிருந்த பெண் யானைக்கு சிகிச்சையின் தொடர்ச்சியாக பழங்களும், மண்டை வெல்லமும், தென்னை இலையும் அளிக்கப்பட்டது. பெண் யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து வனத்துறையினரால் கண்காணித்து வரப்படுகிறது.

 

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் மேலும் அப்பகுதியில் அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )